just think

Friday, May 1, 2015

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவு, வரும், 7ம் தேதி தமிழக தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது. கல்லூரிகளில் உள்ள, 'புரவிஷனல்' சான்றிதழ் போல், இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், உயர் கல்வியில் சேர்வதற்கான அத்தாட்சியாக இருக்கும். இந்த சான்றிதழை எப்படிப் பெறுவது என்பது குறித்த அரசாணையை, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா பிறப்பித்து உள்ளார். அதில், 'தேர்வு முடிவு கள் வெளியானதும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத் துறையின், http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் பள்ளிகள் மூலம், முதல் இரண்டு வாரங்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின், மாணவ, மாணவியர் தங்கள் தேவைக்கேற்ப பதிவு செய்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்' எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக சான்றிதழ்களை கல்லூரி படிப்பில் சேர பயன்படுத்திக்கொள்ள அரசாணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' மே 25ல் வெளியாக வாய்ப்பு: 10ம் வகுப்புக்கு 20ம் தேதி?

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 25ம் தேதிக்குள் வெளிவரும் என, தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 2ம் தேதி துவங்கியது.

10ம் வகுப்புக்கு, மார்ச், 26ம் தேதி வரையிலும், பிளஸ் 2வுக்கு, ஏப்ரல், 20 வரையிலும் தேர்வு நடந்தது. இதில், 24 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நாடு முழுவதும், 9,450 சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 3,200 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வை, 30 ஆயிரம் பேரும், பிளஸ் 2 வகுப்பு தேர்வை, 16 ஆயிரம் பேரும் எழுதினர். 10ம் வகுப்புக்கு விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் தொகுப்புப் பணி நடக்கிறது. பிளஸ்2வுக்கு விடைத்தாள் திருத்தம் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவுகள், 10ம் வகுப்புக்கு வரும், 20ம் தேதி; பிளஸ் 2வுக்கு, 25ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக, சி.பி.எஸ்.இ., வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடக்கக் கல்வி - தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துதல்" சார்ந்து இயக்குனரின் உத்தரவு


பள்ளி மேம்பாட்டுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள் ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. நடப்பாண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப் பங்கில் இருந்து, 67 கோடி ரூபாய், மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து, 33 கோடி ரூபாய், எட்டு தவணைகளில், மாவட்டங்களுக்கு விடுவிப்பு செய்ய வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, ஒப்புதல் அளித்து, அரசாணை ெவளியிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் ெவளியிடப்பட்டுள்ளது.

Thursday, April 30, 2015

பொறியியல் படிப்பில் சேர என்னென்ன ஆவணம் தேவை

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், மே, 6ம் தேதி முதல், 29ம் தேதி வரை அண்ணா பல்கலை மையத்திலும், மே, 27ம் தேதி வரை, மற்ற, 59 மையங்களிலும் வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் முன், தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஏதாவது ஒரு வகுப்பில் தமிழகத்தில் படிக்காமல் இருந்தால், அவர்கள் தமிழக வசிப்பிடச் சான்றிதழ் ஆன் - லைன் நகல் வைத்திருக்க வேண்டும்.இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருந்தால், அதற்கான சான்றிதழும் தயாராக வைத்திருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தின ரின் வாரிசு, சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு, உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், செவித்திறன் குறைவு போன்ற முன்னுரிமை கேட்கும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

மாவட்ட நூலகங்களில் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்

வருகிற மே 7ம் தேதி வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் மற்றும் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
மாணவ மாணவிகள் தேர்வு முடிவுளை இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும் மாவட்ட நூலகங்கள் மற்றும் கன்னிமாரா நூலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவ்சமாக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நூலக இயக்குனரகத்திலிருந்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 29, 2015

மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் படிக்க விரும்பும் உயர்கல்வி, பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள், வேலைவாய்ப்புகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை, சிறந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மூலம், கோடை விடுமுறையில் வழங்க வேண்டும்.

உயர்கல்வி பாடங்களுடன் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள், இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்குரிய கல்வித் தகுதிகள் குறித்த ஆலோசனைகளை, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சாதனையாளர்களோடு இணைந்து, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.